என் மகன் பொறியியல் படிப்பை ஒன்றரை வருடம் படித்து நின்றுவிட்டான். பின்பு பி.காம்., படித்து முடித்துவிட்டான். அதன்பின்னர், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் பிடிவாதமாக சேர்ந்து அதையும் பாதியில் விட்டுவிட்டான். தற்சமயம் வரை எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை. லக்னாதிபதியான சூரிய தசை ஏன் உதவி செய்யவில்லை? சந்திர தசை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்னும் சம்பாதிக்கத் தொடங்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? முன்கோபம் நிறைய வருகிறது. கேமத்துரும யோகம், சகடயோகம் காரணமா? விரயாதிபதியின் தசையாக உள்

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம் 2 ஆம் பாதம். பிறப்பில் சுக்கிர மகாதசையில் இருப்பு 14 வருடங்கள், 10 மாதங்கள், 0 நாள் என்று வருகிறது. லக்னாதிபதியான

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம் 2 ஆம் பாதம். பிறப்பில் சுக்கிர மகாதசையில் இருப்பு 14 வருடங்கள், 10 மாதங்கள், 0 நாள் என்று வருகிறது. லக்னாதிபதியான சூரியபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) நீச்சம் பெற்று நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். நீச்சம் பெற்ற கிரகம் எங்கு உச்சமடைவாரோ அந்த வீட்டின் அதிபதி சந்திரகேந்திரத்தில் இருப்பதால் சூரியபகவான் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணிய புத்திர மற்றும் அஷ்டமாதிபதியான குருபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அயன ஸ்தானாதிபதியான (12) சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுக (4), பாக்கியாதிபதியான (9) செவ்வாய்பகவான், ஸ்திர லக்னங்களுக்கு பாதகாதிபதியுமாகி அயன ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். நீச்சம் பெற்ற கிரகம் உச்சமடையும் மகர ராசியின் அதிபதி மகர ராசியில் ஆட்சி பெற்று சந்திர கேந்திரத்தில் இருப்பதாலும் செவ்வாய்பகவான் வர்கோத்தமத்தில் இருப்பதாலும் அவருக்கும் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கிறது. 
தனம், வாக்கு, குடும்பம் மற்றும் லாபாதிபதியான புதபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் ஆறு மற்றும் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து வர்கோத்தமும் பெறுகிறார். தைரிய (3) தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ஆறு மற்றும் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
சனிபகவான் சந்திர கேந்திரத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகமும் உண்டாகிறது. அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ராகு- கேது பகவான்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே மீன, கன்னி ராசிகளை அடைகிறார்கள். 
சூரிய மகா தசை பதினைந்தாம் வயதில் தொடங்கியது. நீச்சம் பெற்ற சூரியபகவான் நீச்சபங்க ராஜயோகம் அடைந்திருக்கிறார். அவர் லக்னாதிபதியாகவும் ஆகிறார். லக்னாதிபதி எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் ஜாதகருக்கு நன்மை செய்ய கடமைப்பட்டவராகிறார். நான்காமதிபதியான செவ்வாய்பகவான் பொறியியல் துறைக்கு காரகராக ஆனாலும் கல்வி ஸ்தானத்தில் ராகுபகவானுடன் கல்விக்காரகர் அமர்ந்திருக்கிறார். புதபகவானை கணக்கன் என்பார்கள். புதபகவான் வர்கோத்தமம் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் அவரை காமர்ஸ் துறையில் திரும்பி விட்டார். குருபகவானும் பொருளாதாரம், சட்டம், மேலாண்மை போன்ற துறைகளுக்குக் காரகராகிறார். செவ்வாய்பகவான் உணவுத்துறைக்கு காரகராகிறார். அதாவது கேட்டரிங் படிப்பும் ஏற்றது. 
ஒரு ஜாதகத்தில் முழுமையான வலுவைக் கணக்கிட்டுப் பலன் கூற வேண்டும். மூன்று திரிகோணாதிபதிகளில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி முழுமையான பலம் பெற்றிருக்கிறார். மற்ற இரண்டு திரிகோணாதிபதிகளும் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜ யோகத்தைப் பெற்றிருக்கிறார்கள். கல்விக்காரகருக்கும் அசுபக் கிரகச் சேர்க்கை. நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவான் ஆட்சி பெற்றிருந்தாலும் தன் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெறுகிறார். அவரை செவ்வாய்பகவான் பார்ப்பதும் குறை. பித்ரு தோஷமும் உள்ளது. ஷட் பலத்திலும் (ஆறு வகை பலம்) சூரிய சந்திர பகவான்களுக்கு (பித்ரு, மாத்ரு காரகர்கள்) ஒப்பான பரல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து தன் ஐந்தாம் பார்வையால் ஆறாம் வீட்டையும் அங்கு ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவானையும் பார்வை செய்கிறார். ஆறாம் வீட்டை உத்தியோகம் (அடிமைத்தொழில்) செய்யும் வீடு என்று கூறுவார்கள். அதாவது வெற்றிக்கு உதவும் ஸ்தானமாகும். ஆறாம் வீடு பலம் பெற்றிருந்தால் மற்றையோருக்குத் தொண்டு செய்யும் மனப்பான்மை தானாவே வந்துவிடும். அதோடு ஆறாமதிபதியை விட லக்னாதிபதி பலம் குறைந்திருக்கிறார். அதனால் அவர் கடைசி வரை உத்தியோகம் பார்ப்பதே நலம் பயக்கும். சொந்தமாகத் தொழில் எதையும் செய்யக் கூடாது. 
குருபகவானின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீடான தன் ஆட்சி வீட்டின் மீது படிகிறது. ஒரு வீட்டின் அதிபதி அந்த வீட்டைப் பார்த்தால் அந்த வீட்டின் பலம் கூடும். அதோடு சனிபகவானும் ஆட்சி பெற்றிருக்கிறார். இதனால் தீர்க்காயுள் உண்டாகும். 
குருபகவானின் ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீது படிகிறது. "பத்தில் ஒரு பாபி' என்கிற வழக்கிற்கு ஏற்ப பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேதுபகவானுக்கும் பலம் கூடுகிறது. அதனால் உத்தியோகத்தில் சிறப்பான நிலையை எட்டிவிடுவார். 
மேலும் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியுடன் பரிவர்த்தனை யோகம் பெற்று இருப்பதால் சந்திர மகா தசையில் பிற்பகுதி நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். சந்திரபகவானுக்கு முன்பின் வீடுகளில் கிரகங்கள் இல்லாவிட்டால்தான் கேமத்துரும யோகம் என்று பெயர். அதே சமயம் சந்திரபகவானுக்கு பன்னிரண்டாம் வீட்டில் கிரகம் இல்லாமல் இருப்பதும் இரண்டாம் வீட்டில் கேதுபகவான் இருப்பதும் சிறிது குறைதான் என்று கூற வேண்டும். பேச்சிலும் நிதானம் இராது. சந்திர குருபகவான்கள் ஒருவருக்கொருவர் ஆறு எட்டாமிடங்களில் இருந்தால் சகட யோகம் என்று கூறப்பட்டுள்ளது. சகடம் என்றால் சக்கரம் என்று பொருள். 
அதேசமயம் சந்திரபகவானுக்கு ஆறாமிடத்தில் குருபகவான் இருந்தால் அதை "லாபச் சகட யோகம்' என்று கூறுவார்கள். அதனால் சந்திரபகவானின் தசையின் பின்பகுதியிலிருந்து அதாவது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவரின் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கும் என்று உறுதியாகக் கூறலாம். மற்றபடி அவர் முழுமையான பௌர்ணமி யோகத்திலும் பிறந்திருக்கிறார். அதனால் அனுகூலமான தசாபுக்திகள் மாறியவுடன் மனமாற்றங்கள் ஏற்பட்டு விடும்.
 இந்த சந்திர மகா தசையில் அவருக்குச் சிறப்பான வருமானம் வரும் உத்தியோகங்கள் கிடைக்கும். சர ராசிகள் நான்கிலும் கிரகங்கள் இருப்பதால் வெளியூர், வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் இல்லத்தில் அபிராமி அந்தாதியைப் படித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com