எனக்கு இரண்டு மகன்கள் இருவருக்குமே பரணி நட்சத்திரம். மூத்த மகன் மருத்துவத்துறையில் பணியாற்றுகிறார். அவரது மனைவியும் மருத்துவர். இரண்டாம் மகனும் மருத்துவம் படிக்க முயற்சித்து கைகூடாமல் போய்விட்டது. எப்போது திருமணம் கைகூடும்? குடும்பத்தில் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக அமைந்தால் ஒருவர் மட்டுமே யோகபாக்கியங்கள் பெற முடியுமா? - வாசகர், வேலூர்

உங்கள் இளைய மகனுக்கு கடக லக்னம், மேஷ ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது.

உங்கள் இளைய மகனுக்கு கடக லக்னம், மேஷ ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது. ராகுபகவான் ஆட்சி பெற்றுள்ள குருபகவானுடன் இணைந்து இருப்பதால் அஷ்டமஹா நாக யோகத்தைக் கொடுக்கிறார். அதனால் அவருக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு சம அந்தஸ்தில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. அவரின் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். மற்றபடி குடும்பத்தில் இருவர் ஒரே நட்சத்திரமாக இருந்தால் ஒருவருக்குத்தான் யோகபாக்கியம் உண்டாகும் என்பது இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com