வெளிநாட்டில் வேலை செய்யும் என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய மணமகள் அமைவார்? ஊதிய உயர்வு உண்டா? என் மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், வில்லிவாக்கம்

உங்கள் மகனுக்கு துலா லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி  பலம் பெற்று லக்ன சுபர்களுடன் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார்.

உங்கள் மகனுக்கு துலா லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி  பலம் பெற்று லக்ன சுபர்களுடன் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். அவருக்கு வெளிநாட்டில் தங்குவதற்கே வாய்ப்பு கூடுதலாக உள்ளது. அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் ஊதிய உயர்வு, பதவு உயர்வு ஆகியவை கிடைத்துவிடும். பங்கு முதலீடு அவருக்கு லாபம் தராது.  
உங்கள் மகளுக்கு களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றிருக்கிறார். களத்திர ஸ்தானத்தையும் குருபகவான் பார்வை செய்கிறார். கஜகேசரி யோகம், புத ஆதித்ய யோகம், மாளவிகா யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அதோடு தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அவருக்கு படித்த நல்ல வேலையில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு அல்லது அரசு சார்ந்த வேலை கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com