என் மகனுக்கு தொழிலில் நிறைய நஷ்டம். திருமணமும் இன்னும் அமையவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், காரைக்குடி

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மகர ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று லாபாதிபதியுடன் இணைந்து குருமங்கள யோகத்தைக் கொடுக்கிறார்.

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மகர ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று லாபாதிபதியுடன் இணைந்து குருமங்கள யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி உச்சம் பெற்று நீச்சம் பெற்ற தைரிய ஸ்தானாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். செய்தொழிலிலும் வளர்ச்சி உண்டாகும். மற்றபடி நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் போதுமானது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com