நான் +2 வரை படித்துள்ளேன். இதுவரை எனக்கு எல்லாவற்றிலும் தோல்வியே கிடைக்கிறது. வாழ்க்கையே வெறுமையாக இருக்கிறது. எந்த வேலையும் நிரந்தரமாக அமையவில்லை. தற்போது செக்யூரிட்டி வேலை செய்கிறேன். எடுக்கும் காரியங்களில் வெற்றியும் நிம்மதியான வாழ்க்கையும் எப்போது அமையும்? வெளிநாடு செல்லும் யோகமுண்டா? - லோகநாதன், திருச்சி

உங்களுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. தற்சமயம் உங்களுக்கு சந்திரபகவானின் தசையில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் புக்தி  இன்னும் ஒன்றரை

உங்களுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. தற்சமயம் உங்களுக்கு சந்திரபகவானின் தசையில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் புக்தி  இன்னும் ஒன்றரை ஆண்டுகள் நடக்கும். பாக்கியாதிபதி உச்சம் பெற்று லக்னாதிபதியையும் தனாதிபதியையும் பார்வை செய்கிறார். சிவராஜ யோகம், சசமஹா யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் வாழ்க்கை சிறப்படைந்து விடும். மணவாழ்க்கை சீராக அமையும். 
வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. இந்த ஆண்டுஅக்டோபர் மாதத்திற்குப்பிறகு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com