என் அண்ணன் மகன் ஓர் உயர்ந்த பதவியில் உள்ளார். இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணமாகும்? எத்திசையில் பெண் அமையும்? பதவியில் மாற்றம் ஏற்படுமா? - வாசகி, திருச்சி 

உங்கள் சகோதரர் மகனுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. பாக்கியாதிபதி உச்சம் பெற்று புத ஆதித்யர்களைப் பார்வை செய்கிறார்கள்

உங்கள் சகோதரர் மகனுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. பாக்கியாதிபதி உச்சம் பெற்று புத ஆதித்யர்களைப் பார்வை செய்கிறார்கள். சுகாதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பதும சிறப்பு. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியை சிறப்புப் பார்வையாகப் பார்வை செய்கிறார்கள். புத்திகாரகரும் கேந்திர ஸ்தானாதிபதியும் வலுவாக இருப்பது ஜாதகத்திற்கு வலு ஊட்டுகிறது. அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கிறது.அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். ஆரோக்கிய ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் நல்ல வளர்ச்சியை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com