என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? சுக்கிரபகவான் நீச்சபங்கம் அடைகிறாரா? எத்தகைய பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருவண்ணாமலை

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி ஆகியோர் அயன ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி ஆகியோர் அயன ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். சுக, களத்திர ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான தனுசு ராசியை அடைகிறார். தற்சமயம் லாபாதிபதியான சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணமும் கைகூடும். நவாம்சத்தில் சுக்கிரபகவான் நீச்சமடைந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com