என் மனைவிக்கு குரு தசை முடிந்து சனி தசை வரப்போகிறது. சனி தசையுடன் ஏழரை நாட்டு சனியும் வருகிறது. பலகீனமான என் மனைவியின் உடல்நலம் பாதிக்கப்படுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், காஞ்சிபுரம்

உங்கள் மனைவிக்கு மகர லக்னம், தனுசு ராசி. தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது.

உங்கள் மனைவிக்கு மகர லக்னம், தனுசு ராசி. தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக, அனைவருக்கும் லக்னாதிபதியின் தசை நன்மைகளைச் செய்யும். அதோடு அவருக்கு சனிபகவான், குரு, சந்திர, புதபகவான்களுடன் இணைந்திருப்பது சிறப்பு. புதபகவான் ஆரோக்கிய ஸ்தானம் மற்றும் பாக்கியாதிபதியாக ஆவதால் ஏழரை நாட்டு சனியில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாகவே அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரச் சொல்லவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com