என் பேரனுக்கு எந்தத் துறையில் படிப்பு, வேலை வாய்ப்பு, மேன்மை அமையும்? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், திருப்பூர்

உங்கள் பேரனுக்கு மீன லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும்

உங்கள் பேரனுக்கு மீன லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் கல்வி ஸ்தானாதிபதியும் கல்வி காரகருமான புதபகவான், களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் உச்சம் பெற்று புதஆதித்ய யோகமும் பெற்று இருப்பதால் சிவில், மெக்கானிக்கல், மேலாண்மைத் துறையில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் அமையும். படித்த துறையிலேயே வேலையும் அமையும். தற்சமயம் குருபகவானின் பார்வையைப் பெற்றிருக்கும் சுக்கிரபகவானின் தசை நடப்பதால் படிப்படியாக பெற்றோர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com