நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறேன். ஒன்றரை வருடமாக உடல்நிலை சரியாக இல்லை. தொழிலும் பின்னடைவு ஆகிவிட்டது. சொந்த வீடு அமையுமா? ஆயுள் எவ்வாறு உள்ளது? - வாசகர், ஈரோடு

உங்களுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும். நீங்கள் செய்துவரும் தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com