எனக்கு இதய நோய். சர்க்கரை நோய் உள்ளது. சிகிச்சையும் மருந்தும் எடுத்து வருகிறேன். 24 ஆண்டுகள் மருந்து கடையில் வேலை செய்தேன். தற்போது வேலை இல்லை. வேலை கிடைக்குமா? நோய்கள் குணமாகுமா? கடன் அடையுமா? - வாசகர், பொள்ளாச்சி

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள குடும்ப தைரிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் இறுதிப் பகுதி நடக்கிறது.

குடும்ப வளர்ச்சி சிறக்கும்
 உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள குடும்ப தைரிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் இறுதிப் பகுதி நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் உடல்நிலை சீராகி மறுபடியும் மருந்து சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை கிடைத்து விடும். குருசந்திர யோகம், ருசக யோகம், குருமங்கள யோகம், சந்திரமங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன.அதனால் எதிர்காலம் பற்றிய பெரிய கவலை வேண்டாம். உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மீன ராசி. தற்சமயம் கேதுபகவானின் தசை முடிய உள்ளது. 2020 ஆண்டு தொடரும் ஆட்சி பெற்ற சுக்கிர மஹா தசை நடக்கத் தொடங்குவதால் உங்கள் குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாக அமையும். உங்கள் மகளின் ஜாதகத்தை வேறொரு சமயத்தில் அனுப்பவும். அவருக்கு ஒரே நட்சத்திரம், ராசி ஆக இருந்தாலும் பலன்கள் மாறுபடலாம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com