என் மகனுக்கு 30 வயதாகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? உத்தியோகம் பார்க்கும் பெண் அமையுமா? - வாசகி, பாடி

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ருசக யோகத்தைக் கொடுக்கிறார்.

சிவபெருமானை வழிபடுக
 உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ருசக யோகத்தைக் கொடுக்கிறார்.
 பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பாக்கியாதிபதியான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஆறாம் வீட்டையும் தொழில் ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புத, சுக்கிரபகவான்களையும் பார்வை செய்கிறார்.
 தற்சமயம் குருமஹா தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com