என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், வேலூர்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதிகள் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு திருமணம்
உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதிகள் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். களத்திர ஸ்தானத்தில் லாபாதிபதியும் தைரிய ஸ்தானாதிபதியும் இணைந்து இருக்கிறார்கள். இவர்களின் பார்வை லக்னத்தின் மீது படிகிறது. தன பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் களத்திர ஸ்தானாதிபதியையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com