உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. தர்மகர்மாதிபதிகள் தர்ம ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். களத்திர நட்பு ஸ்தானங்களில் வலுவான கிரகங்கள் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். இதனால் அரசியலும் ஏற்றதாக அமைகிறது. அரசு வேலையை முழுமையாக முடித்துவிட்டு ஓய்வு பெற்றபிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவது ஏற்றது. மற்றபடி எழுத்து துறையும் ஏற்றது. பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.