எனது மூன்று மகன்களுக்கும் எப்போது திருமணம் அமையும்? நல்ல மருமகள்கள் அமையவேண்டும். ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், மதுராந்தகம் 

உங்கள் மூத்த மகனுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான குருபகவானின்

உங்கள் மூத்த மகனுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான குருபகவானின் தசையில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் புக்தி நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் களத்திர ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் இரண்டாம் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான புதபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சூரியபகவானுடனும் ஆட்சி பெற்ற சுக்கிரபகவானுடனும் லாப ஸ்தானத்தில் இணைந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். இவருக்கு தற்சமயம் லக்னாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த உத்தியோகம் பார்க்கும் பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் மூன்றாம் மகனுக்கு கன்னி லக்னம், சிம்மராசி. களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான குருபகவான் 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய பாக்கிய ஸ்தானாதிபதிகள் மற்றும் லாப ஸ்தானாதிபதிகளைப் பார்வை செய்கிறார். இவருக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் மகன்கள் மூவரின் திருமணத்திற்காகவும் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com