என் மகள் திருமணம் எப்போது? வரன் எத்திசையில் அமையும்? தோஷமுள்ள வரனைத் தான் பார்க்க வேண்டுமா? 6 இல் செவ்வாய் இருப்பது தோஷமா? 7 இல் குரு தோஷமா? - வாசகி, மதுரை 

உங்கள் மகளுக்கு மீன லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானத்தில் குருபகவான் லக்னாதிபதியாகி அமர்ந்திருப்பது தோஷமில்லை.

உங்கள் மகளுக்கு மீன லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானத்தில் குருபகவான் லக்னாதிபதியாகி அமர்ந்திருப்பது தோஷமில்லை. களத்திர ஸ்தானாதிபதி புதபகவான் திரிகோண ராசியான ஜந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இதனால் இரண்டு கிரகங்களுக்கும் முழுமையான கேந்திராதிபத்ய தோஷத்தின் பாதிப்பு ஏற்படாது. பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் இருப்பதால் பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. அவரின் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் ஏழாமதிபதிக்கு ஏற்ற சம தோஷம் பார்த்து சேர்த்தால் போதுமானது. மற்றபடி இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com