உங்கள் சகோதரருக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. தர்மகர்மாதிபதியான சனிபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்கிறார். அவரின் கடன் பிரச்னைகள் முழுமையாகத் தீர இன்னும் இரண்டாண்டுகள் ஆகும். அதுவரை பொறுமையாக இருந்து பொறுப்புடன் தொழிலை செய்து வரச்சொல்லவும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரச் சொல்லவும்.