எனது பேத்தியின் ஜாதகத்தில் 8 -ஆம் இடம் மகரத்தில் சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு ஆகிய கிரகங்கள் இருப்பதால் திருமணம் தாமதமாகும் என்கிறார்கள். எப்போது திருமணம் நடைபெறும்? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக அமையுமா? ஆசிரியர் தொழில் நிரந்தரமாகுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், கோயம்புத்தூர்

உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி, தொழில் ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தைரியாதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார்

உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி, தொழில் ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தைரியாதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் நிரந்தரஅரசு வேலை கிடைக்கும். தற்சமயம் அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். குடும்பத்துடன் இணைந்து வாழ்வார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com