என் கணவர் அரசுப்பணியில் இருந்து இறந்து 4 வருடங்களாகின்றன. என் மகளுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு முயற்சித்து வருகிறேன். இந்த வருடத்திற்குள் அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எந்த வயதில் நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?- வாசகி, மூலனூர்

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி. லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி. லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கிறார். அதோடு அவருக்கு தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு வேலை கிடைக்கும். அவருக்கு செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் இல்லை. 24- ஆம் வயதில் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com