எனது மகனுக்கு 8- இல் செவ்வாய் உள்ளது. எந்த வயதில் திருமணம் நடைபெறும்? எத்திசையில் மணமகள் அமைவார்? அரசு வேலை கிடைக்குமா? பூர்வீகச் சொத்து கிடைக்குமா? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?"  - வாசகர், கோயம்புத்தூர்.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். எட்டாம் வீட்டில் செவ்வாய்பகவான் (மீன ராசி) இருப்பது செவ்வாய் தோஷமில்லை. குருபகவானின் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது படிகிறது. அவருக்கு தற்சமயம் அயன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேதுபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு படித்த பெண் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். தனியார் பணியிலேயே நல்ல வளர்ச்சி அடைவார். பூர்வீகச் சொத்தும் கிடைக்கும். கேது மஹாதசையில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து நல்ல நிலைமையை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com