என் மகனுக்கு அரசு வேலையா? அல்லது தனியார் வேலையா? எதிர்காலத்தில் வீடு வாங்கும் வாய்ப்புண்டா? எந்தத் திசையில் வாசல் இருக்க வேண்டும்? எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், ஈரோடு

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார்.

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் நீச்சம் பெற்றிருந்தாலும் அங்கே ஆட்சி பெற்றுள்ள சுக்கிரபகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பாக்கியாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தொழில், லாப ஸ்தானாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. மேலும் பத்தில் ஒரு பாவி என்கிற வழக்கின்படி தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான்அமர்ந்து இருப்பது சிறப்பு. இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து அவருக்கு ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கிவிட்டது. அவருக்கு தனியார் துறையில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். வேலையும் கிடைத்துவிடும். இன்னும் இரண்டாண்டுகள் கழித்து நல்ல நிலையை எட்டி விடுவார். நான்காம் வீட்டில் ஓர் உச்ச கிரகமும் நான்காமதிபதி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதாலும் எதிர்காலத்தில் சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளது. வடக்கு அல்லது கிழக்கு பார்த்த வாசல் உள்ள வீடு ஏற்றது. 2021 -ஆம் ஆண்டு திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com