என் மகனுக்கு முழுமையாகச் சரளமாக பேச்சு வரவில்லை. அவரின் படிப்பு எவ்வாறு உள்ளது? எதிர்காலம் நன்றாக அமையுமா? - வாசகர், திருவாரூர்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும் அந்த வீட்டுக்கதிபதியான சந்திரபகவானுடன் கேந்திரம் பெற்றிருப்பதாலும் வர்கோத்தமம் அடைந்திருப்பதாலும் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். அதோடு, செவ்வாய்பகவானே ஆரோக்கிய ஸ்தானாதிபதியாகவும் ஆவதால் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்டாது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு சரளமாகப் பேசுவார். கல்வி ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதாலும் கல்விக்காரகருடன் லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் சம்பந்தம் பெற்றிருப்பதாலும் கல்வியில் சாதனைகள் செய்வார். தொடர்தும் அஷ்டமஹா நாகயோகத்தைப் பெற்றுள்ள ராகுபகவானின் தசையாக உள்ளதால் குடும்பத்தின் வளர்ச்சி படிப்படியாக உயரும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com