நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். என் வருங்காலம் எவ்வாறு அமையும்? - சீனிவாசன்

உங்களுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்று நீச்சம் பெற்றுள்ள பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியைப் பார்வை செய்கிறார்

உங்களுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்று நீச்சம் பெற்றுள்ள பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியைப் பார்வை செய்கிறார். நீச்சனை நீச்சன் பார்த்தால் நினைத்ததை முடிப்பான் என்பது வழக்கு. இதனால் இரண்டு கிரகங்களுக்கும் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்று புரிந்துகொள்ள வேண்டும். களத்திர நட்பு ஸ்தானத்திற்கும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பாக்கியாதிபதியான ஒன்பதாமதிபதியான சூரியபகவானுடன் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் தர்மகர்மாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் குருபகவானின் தசையில் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சுக்கிரபகவானின் புக்தி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் நடக்கும். இந்த காலகட்டத்திற்குப் பிறகு குருபகவானின் தசையில் பிற்பகுதியில் வாழ்க்கையில் மகிழ்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகள் உயரத் தொடங்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். உங்கள் மனைவிக்கு மகர லக்னம், சிம்ம ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சிபெற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானும் ஆறு மற்றும் பாக்கியாதிபதியான புதபகவானும் தர்மகர்மாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசை நடக்கிறது. இதுவும் யோகத் தசையாக நடப்பதால் உங்கள் குடும்ப வளர்ச்சி உயரத் தொடங்கும். வருங்காலம் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சியாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com