என் மகள் வழி பேரன் கேட்டரிங் படித்து, வெளிநாட்டு உணவு தயாரிப்பு வேலை செய்து வருகிறார். மேலும் செவி பிரச்னை உள்ளதால் திருமணம் தடைப்படுகிறது. எப்போது திருமணம் கைகூடும்? நல்ல இடமாக அமையுமா? - நடேசன், பெங்களூரு 

உங்கள் பேரனுக்கு மேஷ லக்னம், மீன ராசி. அவருக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. மேஷ லக்னத்திற்கு செவ்வாய்பகவான் ஏழாம் வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷமில்லை.

உங்கள் பேரனுக்கு மேஷ லக்னம், மீன ராசி. அவருக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. மேஷ லக்னத்திற்கு செவ்வாய்பகவான் ஏழாம் வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷமில்லை. மேலும் செல்வாய்பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பு. பூர்வபுண்ணியாதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதும் சிறப்பு. பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். இதனால் அவரின் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் அனைத்தும் சராசரிக்கும் அதிகமாகவே கிடைத்துவிடும். களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பதை குறை என்று கூற முடியாது. அவருடன் விபரீத ராஜ யோகம் பெற்ற புதபகவானும் தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவானும் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் அவருக்கு வேலை பார்க்கும் பெண் அமைவார். அவருக்கு தற்சமயம் கேதுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு இந்த ஆண்டு படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். இதுவரை நீங்கள் செய்துள்ள பரிகாரங்களே போதுமானது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com