எனது மகன்வழி மூத்த பேரனுக்கு நல்ல குடும்பத்தில் பிறந்த குணவதியான மணமகள் அமைவாரா? எப்போது திருமணம் அமையும்? பி.இ., படித்துவரும் இரண்டாவது பேரன் வேலைக்குச் செல்வாரா? அல்லது மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு உண்டா? இவர்கள் இருவரின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?  -ஆர்.கே. நகர், திருப்பூர்

உங்கள் மூத்த பேரனுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு.

உங்கள் மூத்த பேரனுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானத்தில் கேதுபகவான் இருந்து அந்த வீட்டை பூர்வபுண்ணியாதிபதி குருபகவான் பார்வை செய்வது சிறப்பு. தொடரும் கேதுபகவானின் தசை சீராகவே செல்லும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். 2021 ஆம் ஆண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்தில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் இரண்டாம் பேரனுக்கு தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. அதனால் கிடைத்த வேலையை எடுத்துக் கொள்வதே சிறப்பு. இவருக்கும் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் உண்டு. அவர்கள் இருவரையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரச் 
சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com