என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? எந்த திசையிலிருந்து பெண் அமைவார்? - வாசகர், குடியாத்தம்

உங்கள் மகனுக்கு மீன லக்னம், தனுசு ராசி. புதஆதித்ய யோகம், குருசந்திர யோகம், சந்திர மங்கல யோகம், ஹம்ஸ யோகம், பத்ர யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன.

உங்கள் மகனுக்கு மீன லக்னம், தனுசு ராசி. புதஆதித்ய யோகம், குருசந்திர யோகம், சந்திர மங்கல யோகம், ஹம்ஸ யோகம், பத்ர யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அஷ்டம ஸ்தானத்தில் லாபாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்றும் சுக்கிரபகவான் ஆட்சி பெற்றும் இருப்பது சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டே படித்த நல்ல வேலையிலுள்ள பெண்(ஒரு சகோதரிவுடன் பிறப்பு) அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி உத்தியோகத்தில் சிறப்பான நிலையை எட்டிவிடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com