என் மகளுக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. மறுமணம் ஆகும் வாய்ப்பு உண்டா? திருமணம் எப்போது கைகூடும்? வெளிநாட்டில் வசிப்பதால் அங்கேயே குடியுரிமை உள்ள மணமகன் அமைவாரா? இந்தியாவில் நிலம் வாங்கி தர்ம காரியங்கள் செய்ய எண்ணுகிறாள். நிலம் வாங்கும் யோகம் உள்ளதா? - வாசகி, சென்னை

உங்கள் மகளுக்கு துலா லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியுடன் பரிவர்த்தனை பெறுகிறார். மாங்கல்ய ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகம் உண்டாகிறது.

உங்கள் மகளுக்கு துலா லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியுடன் பரிவர்த்தனை பெறுகிறார். மாங்கல்ய ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் வெளிநாட்டிலேயே வசிக்கும் வரன் அமைந்து மறுமணம் கைகூடும். அந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கியிருக்க உரிமை கிடைத்து விடும். மற்றபடி தான தர்மங்கள் செய்வதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். 2020 -ஆம் ஆண்டிற்குப்பிறகு எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com