பி.இ., மெக்கானிக்கல் படித்துள்ள என் மகன் 6 மாதங்களாக வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். எப்போது வேலை அமையும்? திருமணம், ஆயுள் பலம், சொந்த வீடு, வாகன யோகம் எவ்வாறு உள்ளது? பி.எஸ்.சி., படிக்கும் என் மகளை படிப்பு முடிந்ததும் மேற்படிப்பு என்ன படிக்க வைக்கலாம்? அரசு உத்தியோகம் உண்டா? வெளிநாட்டு யோகம் உண்டா? திருமணம், ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், கீழ்ப்பாக்கம்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. தற்சமயம் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் ஆறாமதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவானின்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. தற்சமயம் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் ஆறாமதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் லக்னாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கிறது. இதனால் அவருக்கு உடனடியாக படிப்புக்கேற்ற வேலை கிடைத்துவிடும். தனியார் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. 2021 -ஆம் ஆண்டுக்குப்பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்துதிருமணமும் கைகூடும். தீர்க்காயுள் உண்டு. சனி மஹா தசை யோக தசையாகச் செல்லும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், துலாம் ராசி. அவருக்கு மேலாண்மைத்துறை படிப்பு ஏற்றது. அரசுக்கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை அமையும். தொடர்ந்து முழுமையான நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவானின் தசையாக ஆவதால் வாழ்க்கையில்அனைத்து பாக்கியங்களும் படிப்படியாக கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகள் கழித்து அந்நிய உறவில் திருமணம் கைகூடும். உத்தியோகம் பார்ப்பதே சிறந்தது. எதிர்காலம் சிறப்பாக அமையும். இருவருக்கும் பரிகாரம் எதுவும் தேவையில்லை.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com