எனது மகனுக்கு 31 வயது ஆகிறது. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எத்தகைய பெண் அமையும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், சேலம்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பாக்கியாதிபதியான சுக்கிரபகவானுடன் இணைந்து

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பாக்கியாதிபதியான சுக்கிரபகவானுடன் இணைந்து இருப்பதால் தொழில் ஸ்தானத்தில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணியம் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியம் மற்றும் அயன ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் லாபாதிபதியான சந்திரபகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து அயனம், குடும்பம் மற்றும் சுக ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். குருபகவானின் பார்வை தசாநாதனான சந்திரபகவானுக்கும் கிடைப்பது சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிரந்தரமான வேலை, மற்றும் தெற்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் ஆகியவை கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com