எனது வியாபாரம் சில மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இனி நன்றாக நடைபெறுமா? வேறு தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளதா? - வாசகர், ஈரோடு

உங்களுக்கு மீன லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தில் மூலதிரிகோண ராசியில் லாபாதிபதியான சனிபகவானுடன் இணைந்து

உங்களுக்கு மீன லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தில் மூலதிரிகோண ராசியில் லாபாதிபதியான சனிபகவானுடன் இணைந்து இருப்பது சிறப்பு. தற்சமயம் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றுள்ள தைரிய அஷ்டமாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. நீங்கள் செய்து வரும் தொழிலும் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. இந்த குருப் பெயர்ச்சியும் சாதகமாகவே அமைந்துள்ளதால் இன்னும் ஓராண்டுக்குள் நல்ல வருமானம் வந்து கடன் அடைந்து விடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com