உங்களுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி ராகுபகவானுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றும் குருபகவானின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனி, ராகு பகவான்களின் மீதும் படிவதும் சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் பொருளாதார நிலை, குடும்பத்தில் மகிழ்ச்சி இரண்டும் மேன்மையடைந்து விடும். மற்றபடி உங்களுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். புத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதால் குழந்தைகளும் நல்ல நிலைமையை எட்டி விடுவார்கள். இந்த காலகட்டத்தில் பூர்வீகச் சொத்தும் கைவந்து சேரும்.