ஜோதிட கேள்வி பதில்கள்
29 வயதாகும் என் பெண்ணிற்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல வரன் அமையுமா? - வாசகர், விழுப்புரம்
உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான யோககாரகரான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருக்கிறார்
உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான யோககாரகரான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். குடும்பாதிபதியும் பாக்கியாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் அயன ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். சுக்கிரபகவானும் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். தற்போது சுக்கிரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல சிறப்பான வேலையிலுள்ள வரன் வடக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாகவும் அமைதியாகவும் இருக்கும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.