என் கணவர் வைத்துள்ள பிரிண்டிங் பிரஸ் தொழிலில் மிகவும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில் ஏற்றதாக உள்ளதா? தொழிலில் முன்னேற்றம் உண்டா? என் மாமனார் வழி சொத்து எப்போது கிடைக்கும்? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகி, பொன்னேரி

உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதிகள் ராகுபகவானுடன் இணைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இணைந்திருக்கிறார்கள்.

உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதிகள் ராகுபகவானுடன் இணைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இணைந்திருக்கிறார்கள். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் தர்மகர்மாதிபதிகள் லாபாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். பொதுவாக, இரண்டு கேந்திர வீடுகளில் கிரகக் கூட்டு சிறப்பாகும். அதுவும் அவருக்கு ஏழு கிரகங்கள் இந்த முக்கிய கேந்திர ராசிகளில் இருப்பது மிகவும் சிறப்பாகும். அவர் செய்து வரும் தொழில் அவரின் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. ஆரோக்கிய ஸ்தானாதிபதி சுப பலம் பெற்றிருப்பதால் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு பொருளாதாரம் உயரத் தொடங்கும். அந்த காலகட்டத்தில் தந்தை வழிச் சொத்து கைவந்து சேரும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com