இண்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் வெளிவரும் மஹேந்திரா ஸ்கார்பியோ!

மஹிந்திரா நிறுவனம் தனது பிரசித்தி பெற்ற மாடலான ஸ்கார்பியோவை 1.99 லிட்டர் எம்ஹாக் இஞ்சினுடன், எரிபொருள் பயன்பாட்டை 7 சதவீகிதம் வரை குறைக்கும் இண்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன்  அறிமுகம் செய்திருக்கிறது.   
இண்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் வெளிவரும் மஹேந்திரா ஸ்கார்பியோ!

மஹிந்திரா நிறுவனம் தனது பிரசித்தி பெற்ற மாடலான ஸ்கார்பியோவை 1.99 லிட்டர் எம்ஹாக் இஞ்சினுடன், எரிபொருள் பயன்பாட்டை 7 சதவீகிதம் வரை குறைக்கும் இண்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது

2000 சிசி அல்லது அதற்கும் கூடுதலான இஞ்ஜின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு நாட்டின் சில பகுதிகளில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இந்த வகை வாகனங்களின் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தங்களது 2000சிசிக்கு அதிகமான கார்மாடல்களின் இஞ்சினில் மாற்றம் செய்து, 2000 சிசிக்கு குறைவான கொள்ளவு கொண்ட மாடல்களாக நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின.

அந்த வரிசையில்புதிய மஹேந்திரா ஸ்கார்பியோ டெல்லி என்சிஆர் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய தலைமுறை ஸ்கார்பியோ. இண்டெலி-ஹைபிரிட் நுட்பத்தில் காரின் இஞ்சின், வாகனம் நிலையிலிருக்கும் போது தானாகவே அணைந்து பின்னர் தேவைப்படும் நேரத்தில் இயங்கத்தொடங்கும். மேலும் இதன் பிரேக் ஆற்றல் சேமிக்கப்பட்டு, பேட்டரி சார்ஜ் செய்யப்பயன்படும்.

ஸ்கார்பியோ வின் S4, S4+, S4+ 4WD, S6+, S8, S10 2WD & S10 4WD ஆகிய அனைத்து வேரியண்ட்களிலும் இந்த நுட்பத்துடனான கார் வெளிவருகிறது.  எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் இண்டெலி-ஹைபிரிட் நுட்பம் மூலம், டெல்லி-என்சிஆர் பகுதி தூய்மையாகவும், பசுமையாகவும் மாற ஸ்கார்பியோ உரிமையாளர்கள் பங்காற்ற இயலும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஹைபிரிட் வகை மாடலாக இருப்பதால், மதிப்பு கூட்டு வரியில் 5 சதவீகிதம் சலுகை கிடைக்கப்பெற்று, வாடிக்கையாளர்கள் ரூ. 60,000லிருந்து ரூ 90,000 வரை சேமிக்க முடியும். இண்டெலி-ஹைபிரிட்டுடனான ஸ்கார்பியோ ரூ. 9.35 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கிடைக்கும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com