புதிய வடிவில் கிரெட்டா: ஹுண்டாய் அறிமுகம்

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கிணங்க கிரெட்டா மாடல் காரை மூன்று புதிய வடிவங்களில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய வடிவில் கிரெட்டா: ஹுண்டாய் அறிமுகம்

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கிணங்க கிரெட்டா மாடல் காரை மூன்று புதிய வடிவங்களில் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய்.கே. கூ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தினந்தோறும் மாற்றங்களைக் கண்டு வரும் சந்தையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப புதிய தயாரிப்புகளை வழங்குவதே ஹுண்டாயின் முக்கிய நோக்கம். அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் அவர்களின் கருத்துக்களை அறிந்து கிரெட்டா கார் மூன்று புதிய வடிவங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிரெட்டா 'இபிளஸ்' மாடல் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. அதன் விலை ரூ.9.99 லட்சம் (புது தில்லி விற்பனையக விலை). இந்த மாடலில், 2-டின்-ஆடியோ சிஸ்டம், எல்.இ.டி. இண்டிகேட்டர், லக்கேஜ் லேம்ப், பாதுகாப்பு காற்றுப் பை உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது.
1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கிரெட்டா 'எஸ்எக்ஸ் பிளஸ்' மாடல் விலை முறையே ரூ.12.35 லட்சம் மற்றும் ரூ.13.88 லட்சமாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com