புதிய "கேப்சர்' சொகுசுக் கார் இவ்வாண்டில் அறிமுகம்: ரெனோ

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ நிறுவனம் நடப்பு ஆண்டில் "கேப்சர்' என்ற புதிய வகை சொகுசுக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக திங்கள்கிழமை அறிவித்தது.
புதிய "கேப்சர்' சொகுசுக் கார் இவ்வாண்டில் அறிமுகம்: ரெனோ

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ நிறுவனம் நடப்பு ஆண்டில் "கேப்சர்' என்ற புதிய வகை சொகுசுக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக திங்கள்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுமித் ஸாஹனி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற "கேப்சர்' ரக சொகுசுக் காரை இந்தியாவில் நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட "கேப்சர்' கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்தப் புதிய அறிமுகத்தின் மூலம் இந்தியாவில் சொகுசுக் கார் பிரிவில் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை அதிகரிப்பதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம்.
இந்தியாவில் தற்போது ரெனோ நிறுவன விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. இதனை மேலும் அதிகரிக்கத் தீவிரமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். விற்பனை எண்ணிக்கையை கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில் வியூகங்களை வகுத்து வருகிறோம் என்றார் அவர்.
"கேப்சர்' கார் அறிமுகமாகும் உத்தேச தேதி குறித்து ரெனோ நிறுவனம் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com