பெட்ரோல் மற்றும் டீசல் வித்தியாசங்கள் என்ன ?

பெட்ரோல் எஞ்சின் ஆற்றலை வெளிப்படுத்த ஸ்பார்க் பிளக்கினை கொண்டு பெட்ரோல் எரிக்கப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் வித்தியாசங்கள் என்ன ?

பெட்ரோல் எஞ்சின் ஆற்றலை வெளிப்படுத்த ஸ்பார்க் பிளக்கினை கொண்டு பெட்ரோல் எரிக்கப்படும். ஆனால் தவறுதலாக டீசல் நிரப்பபட்டால் முதல் கட்டமாக எரிபொருள் வடிகட்டிகளை பாதிக்கும். டீசலுக்கு உயவு தன்மை அதிகம் என்பதால் பம்புகளை பெரிதும் பாதிக்கும். மேலும் ஸ்பார்க் பிளக்கை பழுதடைய செய்யும். இதனால் எஞ்சின் மிக பெரிய அளவு பாதிப்புகளுக்கு ஆளாகும்.

டீசல் எஞ்சின் மிக அதிகப்படியான உயவு தன்மையில் இயங்கக்கூடியதாகும். ஆனால் பெட்ரோல் உயவு மிக குறைவு என்பதால் பம்புகள், இன்ஜெக்டர்கள், வடிகட்டிகள் என பலவும் பாதிக்கப்படும் மிக அதிகப்படியான செலவினை வைத்துவிடும். பெட்ரோல் எஞ்சினை விட டீசல் எஞ்சின் அதிகப்படியான பாதிப்புகள் மற்றும் செலவு வைக்கும்.

தவறுதலாக சரியான எரிபொருளினை நிரப்பாமல் விட்டால் உங்கள் காரினை இயக்குவதனை தவிருங்கள். மேலும் நீங்கள் இயக்கி விட்டால் வாகனத்தின் புகை மற்றும் எஞ்சின் சத்தம் போன்றவற்றில் மிக பெரிய மாறுதல் தெரியும். எனவே எஞ்சினில் மாறுதல் தெரிந்தால் உடனே வாகனத்தை இயக்குவதனை தவிர்த்து சோதியுங்கள்.

முதலில் எரிபொருள் இனைப்பினை துன்டித்து விடுங்கள். மற்றும் எரிபொருளினை முழுமையாக நீக்கிவிட்டு எஞ்சினை சுத்தம் செய்ய வேண்டும்.

கவனிக்க வேண்டியவை
 

  • பெட்ரோல் ஆட்டோ இக்கினிஷன் வெப்பநிலை 246 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  • டீசல் ஆட்டோ இக்கினிஷன் வெப்பநிலை 210 டிகிரி செல்சியஸ் ஆகும்
  • பெட்ரோல் உயவு தன்மையில் எவ்விதமான மாற்றங்ளும் எற்படாது.
  • டீசல் உயவு தன்மை அதிகம். மேலும் குறைவான வெப்பநிலையில் உயவு தன்மை அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com