பயணிகள் வாகன விற்பனை 11% குறைந்தது

உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 11.21 சதவீதம் சரிவடைந்தது.
பயணிகள் வாகன விற்பனை 11% குறைந்தது

உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 11.21 சதவீதம் சரிவடைந்தது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் ட(எஸ்.ஐ.ஏ.எம்.) திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டில் கார் விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 1,36,895- ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 1,54,237 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 11.24 சதவீதம் சரிவாகும். அதேபோன்று, பயணிகள் வாகன விற்பனையும் 2,23,454 என்ற எண்ணிக்கையிலிருந்து 11.21 சதவீதம் குறைந்து 1,98,399- ஆக காணப்பட்டது.
அதேசமயம், மோட்டார் சைக்கிள் விற்பனை சென்ற மாதத்தில் 9,43,706 என்ற எண்ணிக்கையிலிருந்து 2.18 சதவீதம் அதிகரித்து 9,64,269- ஆக இருந்தது. மொத்த இருசக்கர வாகன விற்பனை 4 சதவீதம் அதிகரித்து 15,27,049- ஆக இருந்தது. மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 1.44 சதவீதம் உயர்ந்து 56,890- ஆக காணப்பட்டது.
சென்ற ஜூனில் அனைத்துப் பிரிவிலான வாகன விற்பனை 17,96,172- லிருந்து 1.26 சதவீதம் அதிகரித்து 18,18,829- ஆக இருந்தது என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com