பிறந்த நாள் விழாவை தவிர்க்க வேண்டும்: ரசிகர்களுக்கு கமல் ஹாசன் வேண்டுகோள்

உடல்நிலைக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில், தனது பிறந்த நாளான நவம்பர் 7-அன்று எந்த விழாவும் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"நற்பணி இயக்கத் தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com