ஐபிஆர்எஸ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனார் ஜி.வி. பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஐபிஆர்எஸ் (IPRS, Indian Perfroming Right Society) சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஆர்எஸ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனார் ஜி.வி. பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஐபிஆர்எஸ் (IPRS, Indian Perfroming Right Society) சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: IPRS சங்கமானது வணிக இசைப் பயனர்களுக்கு உரிமங்கள் வழங்க மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக, அவர்களிடம் இருந்து உரிமம் சேகரித்து அதன் மூலம் ஒரு சேவையை அளித்துவருகிறது. பிரபல பாலிவுட் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் இந்தச் சங்கத்தின் தலைவராகவும், பதிப்புரிமை நிபுணராண அச்சில் போர்லர் நிரந்தர ஆலோசகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்காக அதன் உரிமையாளர்கள் அதாவது ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் மற்றும் மியூசிக் வெளியீட்டாளர்கள் இவர்களிடமிருந்து உரிமையைப் பெற்று வணிக இசைப் பயனர்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு உரிமத்தை வழங்கி பின்னர் நிர்வாக செலவுகள் கழித்த பிறகு அதன் உரிமையாளர்களுக்கான ராயல்டியை விநியோகிக்கிறது.

ஜாவேத் அக்தர் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து எதிர்காலத்தில் இந்த சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com