'காற்று வெளியிடை’ விமரிசனங்களுக்கு மணி ரத்னம் ஆதாரபூர்வ விளக்கம்!

காற்று வெளியிடை படத்தில் சொல்லப்பட்ட முக்கியமான குறை ஒன்றுக்கு இயக்குநர் மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
'காற்று வெளியிடை’ விமரிசனங்களுக்கு மணி ரத்னம் ஆதாரபூர்வ விளக்கம்!

காற்று வெளியிடை படத்தில் சொல்லப்பட்ட முக்கியமான குறை ஒன்றுக்கு இயக்குநர் மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜெயிலில் இருந்து தப்பிப்பதுபோல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இது பல விமரிசகர்களால் குறை சொல்லப்பட்டது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் இருந்து குழி தோண்டி அதிலிருந்து கார்த்தி தப்பிப்பது போன்று அமைக்கப்பட்ட காட்சிக்கு நிறைய விமரிசனங்கள் எழுந்தன.

இதற்கு மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இக்காட்சி பல உண்மைச் சம்பவங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. ஃபிளைட் லெஃப்டினண்ட் திலிப் பருல்கர் 1971 டிசம்பர் 10-ல் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டார். ஆனால் அழிவுக்கு நிகரான இந்தச் சம்பவத்தை அவர் துணிகரச் செயலாக மாற்றினார். ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்ட பருல்கர், மல்விந்தர் சிங், ஹரிஷ் ஆகியோர் அச்சிறையில் இருந்து 1972 ஆகஸ்ட் 13 அன்று தப்பி வந்தார்கள். 

ஃபெயித் ஜான்ஸ்டன் எழுதிய ஃபோர் மைல்ஸ் டூ ஃப்ரீடம் என்பது அவர்களின் இந்தச் செயலை விளக்கும் புத்தகம் ஆகும். அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் படத்திலும் இடம்பெற்றுள்ளன. தப்பிப்பதற்காக கார்த்தியும் அவர் நண்பர்களும் செய்தது, நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு ஆகும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மணி ரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com