தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக

தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் சன் தொலைக்காட்சிக்கும் பிறந்த நாள் என்பதால்
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக

சன் டிவிக்கும் பிறந்த தினம்

தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் சன் தொலைக்காட்சிக்கும் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. முக்கியமாக கடந்த 24 ஆண்டுகள் வெளிவந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் பணிபுரிந்தவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, 2017-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் ‘பைரவா’ என்று பல ஹைலைட்டுகளை உள்ளடக்கியுள்ளது. பரதன் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், டேனியல் பாலாஜி நடித்துள்ள இத்திரைபப்டம் சன் டிவியில் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் என்ன புதுசு?

ஏப்ரல் 17, 2015-ல் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் சூப்பர் ஹிட் படம் ஓகே கண்மணி விஜய் டிவியில் காலை பதினொரு மணிக்கு ஒளிப்பரப்பாகும். ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளல் இசையில், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும் மறுமுறை பார்க்கலாம்.

அதனைத் தொடர்ந்து எம்.எஸ்.தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி ஒளிபரப்பாகிறது. இது கிரிக்கெட் வீரர் தோனியில் வாழ்க்கையை ஒட்டி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழ் டப்பிங்கிலும் சூப்பர் ஹிட்டானது. இரவு எட்டு மணிக்கு விஜய் டிவியில் இந்தப் படத்தைக் காணலாம். 

ஜெயா தொலைக்காட்சியில் காஷ்மோரா 

காலை 11 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள  ‘காஷ்மோரா’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் கொண்டாடிய வித்தியாசமான படம் இது. 

ஜீ தமிழில் என்ன தமிழ்ப் படம்? 

மாலை நான்கு மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் நடித்துள்ள‘சைத்தான் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

மாலை ஆறு மணிக்கு இயக்குநர் முருகதாஸின் ‘கத்தி’ ஒளிபரப்பாகிறது. விஜய், சமந்தா, சதீஷ் நடித்துள்ள இப்படத்தில் அனிருத்தின் இசை அசத்தல். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும் படம் இது.

ஒவ்வொரு சானலிலும் அட்டகாசமான படங்கள். எதைப் பார்ப்பது எதை விடுவது என்று ரசிகர்கள் திண்டாட வேண்டாம். திரையில் பார்க்கத் தவறிய படங்களை சின்னத் திரையில் கண்டு ரசியுங்கள்.  திரைப்படங்களில் மட்டும் மூழ்கிவிடாமல் அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் கைகுலுக்க, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com