தனி விருப்பு வெறுப்பு சார்ந்த தேர்வுகள்: தேசிய விருது குறித்து கவிஞர் லீனா மணிமேகலை

தனி விருப்பு வெறுப்பு சார்ந்த தேர்வுகள்: தேசிய விருது குறித்து கவிஞர் லீனா மணிமேகலை

தனி விருப்பு-வெறுப்பு சார்ந்த தேசிய விருதுத் தேர்வுகளை விடவும் சர்வதேச விழாக்களில் வழங்கப்படும் விருதுகள்...

தனி விருப்பு-வெறுப்பு சார்ந்த தேசிய விருதுத் தேர்வுகளை விடவும் சர்வதேச விழாக்களில் வழங்கப்படும் விருதுகள் மேலானவை என்று கவிஞர் லீனா மணிமேகலை கருத்து தெரிவித்துள்ளார்.

தில்லியில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து ஏராளமான சர்ச்சைகள் நிலவுகிற நிலையில் கவிஞர் லீனா மணிமேகலை தன் ஃபேஸ்புக்கில் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:

சர்வதேச திரைப்பட விழாக்கள் என்ன பெரிய கொம்பா என்று நீங்கள் என்னை கேட்கலாம். ஆம் பெரிய கொம்புதான். இந்தத் தேசத்தின் ஊழல் கறை படிந்த, தணிக்கை செய்யப்பட்ட, நேரடி அரசாங்கத் தலையீடு மலிந்த, தனி விருப்பு-வெறுப்பு சார்ந்த தேர்வுகளை அடிப்படையாக கொண்டுள்ள "தேசிய விருது" என்ற ஆகப்பெரிய ஜோக்கை விட சர்வதேச விழாக்கள் ஒரு independent artist-க்கான முக்கியமான இடங்கள்தாம்.

நான் கடந்த 15 வருடங்களில் சுமார் 50 சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் சென்றிருக்கிறேன். என் படங்களைத் திரையிட்டிருக்கிறேன். இந்தியாவுக்கு வெளியே நடக்கும் திரைப்பட விழாக்களில் அந்த நாட்டு அரசாங்கங்கள் தலையிடுவதில்லை. ஒரு மந்திரியையோ மேயரையோ கூட பார்க்கமுடியாது. தணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. "சொல்லி வைத்து" விருதுகள் வாங்கிவிட முடியாது. ஊழல் செய்யும் வாய்ப்பு அறவே இல்லை.

அங்கே கலந்துக் கொள்ள, களமாட செய்யவேண்டியதெல்லாம் "உண்மையான சினிமா" மட்டும்தான். தமிழ் "லாபி" கலைஞர்கள் டில்லி வரை குப்பை அள்ளலாம். அதை தாண்டியும் லாபி எத்தனிப்புகள் தென்படுகிறதென்றாலும், சர்வதேச திரைப்பட வெளியில் இன்னும் விலைக்கு வாங்கிவிட முடியாத இடங்களும் விசயங்களும் எஞ்சியிருக்கின்றன என்பது என் எளிய நம்பிக்கை என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com