வைரமுத்துவுக்கு இன்னொரு தேசிய விருது: கமல் ஆருடம்! 

தேசிய விருது பெற்ற வைரமுத்துவை வியந்து மகிழ்ந்தேன். தமிழன் என்பது விலாசம் திறமையே தகுதி.
வைரமுத்துவுக்கு இன்னொரு தேசிய விருது: கமல் ஆருடம்! 

பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சி கல்லூரியை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இக்கல்லூரியை தொடங்கி வைத்தனர்.

தில்லியில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'ஜோக்கர்' தேர்வாகியுள்ளது. சிறந்த பாடலாசிரியாக வைரமுத்துவும், ஒளிப்பதிவாளராக திருவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வைரமுத்துவுக்கு 7-ஆவது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான 'தர்மதுரை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று' என்ற பாடலை எழுதியதற்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருது கிடைத்துள்ளது.

பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சி கல்லூரியின் தொடக்க விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன், ஏழாவது முறையாக தேசிய விருது பெற்றுள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்திப் பேசினார்.

இதுகுறித்து ட்விட்டரில் கமல் கூறியுள்ளதாவது: பாரதிராஜா கலைப்பள்ளி துவக்க விழாவில், 8-வது முறையாக தேசிய விருது பெற்ற வைரமுத்துவை வியந்து மகிழ்ந்தேன். தமிழன் என்பது விலாசம் திறமையே தகுதி. பொன்னாடை போர்த்துகையில் காதில் கிசுகிசுத்தார் வை.மு. இது எட்டாவது என. பிழைதிருத்துகிறார் எனப் புரிந்தேன் ஏழே சரி. ஒருவேளை நான் 8-வது விருதை ஆருடமாகச் சொல்லியிருக்கிறேன் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com