‘மகாபாரதம்’ திரைப்படத்தில் மோகன்லால் பீமன் என்றால் ஸ்ரீகிருஷ்ணர் யார் தெரியுமா?

ஸ்ரீகுமார் இயக்கும் மகாபாரதத்தில் யார் கிருஷ்ணனாக நடிக்கப் போகிறார்கள் என்று தெரியுமா?
‘மகாபாரதம்’ திரைப்படத்தில் மோகன்லால் பீமன் என்றால் ஸ்ரீகிருஷ்ணர் யார் தெரியுமா?

எம்.டி. வாசுதேவன் நாயரின் புகழ் பெற்ற மலையாள நாவலான ‘ரெண்டாம் மூழம்’  மகாபாரதம் எனும் பெயரில் திரைப்படமாகவிருப்பது  நேற்று முதல் அனைவருக்கும் தெரிந்த செய்தியே. பிரபல தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி முயற்சியில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன்லால் பீமனாக நடிக்க 1000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நாவல் திரைப்படமாகவிருக்கிறது. நாவலின் அடிப்படையே நாம் இது வரை அறிந்த வழக்கமான மகபாரதக் கதையாக இல்லாமல் இக்கதையின் போக்கு பீமனின் நோக்கில் பெருங்கதையாக விரிவதே என்பதால் நாவலைப் படிக்காமல் திரைப்படமாகப் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்களுக்கு நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

மகாபாரதம் என்றால் பாண்டவர்களும், கெளரவர்களும் மட்டும் தானா? படைப்பின் பிரதான நாயகனாக ஆரம்பத்தில் இல்லா விட்டாலும் பகவத் கீதை படைக்கப் பட்ட பின் ஈடு இணையற்ற ஒரே பரம்பொருள் எனக் கருதப் படும் பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் இல்லாமல் எப்படி மகாபாரதக் கதையைச் சொல்லி முடிக்க முடியும்? கோபியர் கொஞ்சும் பாலகன் கண்ணனது கதையே தனிப் பெருங்காதை ஆயிற்றே!. அதிருக்கட்டும்... ஸ்ரீகுமார் இயக்கும் மகாபாரதத்தில் யார் கிருஷ்ணனாக நடிக்கப் போகிறார்கள் என்று தெரியுமா? இன்னமும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இன்னார் இருக்கலாம் என ஒரு செய்தி உலவுகிறது.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, அல்லது இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் இருவரில் ஒருவர் ஸ்ரீகுமாரின் இயக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணராக வந்து குழலூதியும், கீதை சொல்லியும் மயக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2018 ல் துவங்கி படம் 2020 ல் திரை தொடும் என்கிறார்கள்.

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com