பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். இதன் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.