இயக்குநர் அட்லீயின்  'ஏ ஃபார் ஆப்பிள்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற!

திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள்
இயக்குநர் அட்லீயின்  'ஏ ஃபார் ஆப்பிள்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற!

திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அதனை மீண்டும் ஒரு முறை உறுதி செய்யும் விதத்தில் உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில், ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம். மே 19 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகும் இந்த  'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு கோடை விருந்தாக இருக்கும் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். 'A for Apple' நிறுவனத்தின் சார்பில் அட்லீ  தயாரித்து,  'Fox Star Studios' வழங்க இருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

ராஜா ராணி, தெறி வெற்றிப் படங்களுக்கு பிறகு இளைய தளபதி விஜயை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் அட்லீ. தீபாவளி வெளியீடு என அறிவித்து விட்டு பரபரப்பாக படப்பிடிப்பு பணிகளில் இருந்த அட்லீ, திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். 

'கடந்த 6 வருடங்களாக என் இயக்குனர் பயணத்தில் சகோதரனாக, குடும்பத்தில் ஒருவராக என்னை ஆதரித்த, என்னை ஆளாக்கிய பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் மாதிரி நான் வளர்ந்த சினிமாவுக்கு நானும் ஒரு பங்காக இருந்து நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் 'ஏ ஃபார் ஆப்பிள்'.  

முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஹைக்கை சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் கதையை கேட்டு அறிமுகப்படுத்துகிறேன். ஐக் எம்.ஆர்.ராதவின் பேரன், ரொம்ப திறமைசாலி. எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், அவர் பேய் கதையை வந்து சொன்ன உடனே தயாரிக்க முடிவெடுத்து விட்டேன். 

தொடர்ந்து என் நண்பன், என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவது தயாரிப்பாகவும், என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் நடக்கும். நான் இயக்கும் தளபதி 61 நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்றார் அட்லீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com