தேசிய விருதுக்கு நான் தகுதியில்லையா? அக்‌ஷய் குமார் கோபம்!

அக்‌ஷய் குமாருக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் உண்டாகியுள்ளன.
தேசிய விருதுக்கு நான் தகுதியில்லையா? அக்‌ஷய் குமார் கோபம்!

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், தில்லியில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை வெளியிட்டனர். அதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மராத்தியில் வெளியான 'காசவ்' தேர்வானது. சிறந்த நடிகராக அக்ஷய் குமாரும் ('ருஸ்தம்' - ஹிந்திப் படம்), சிறந்த நடிகையாக சுரபி லட்சுமியும் ('மின்னாமினுங்கு' - மலையாளப்படம்) அறிவிக்கப்பட்டார்கள். தேசிய விருதை அக்ஷய் குமார் பெறுவது இதுவே முதன்முறையாகும். 

இந்நிலையில் அக்‌ஷய் குமாருக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் உண்டாகியுள்ளன. இதுகுறித்து அக்‌ஷய் குமார் கூறியதாவது: 

நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன். ஒவ்வொருமுறையும் யார் சிறந்த நடிகருக்கான விருது வாங்கினாலும் அதற்கு விமரிசனம் எழுகிறது. நான் பாலிவுட்டில் 25 வருடங்களாக உள்ளேன். இதற்குப் பிறகும் தேசிய விருது வாங்க நான் தகுதியற்றவன் என மக்கள் நினைத்தால் விருதைத் திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com