நடந்தது எல்லாம் நல்லதுக்கே: மாதவன் 'ஓப்பன் டாக்'!

'விக்ரம் வேதா' படத்தினைப் பொறுத்த அளவில் நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்று கருதுகிறேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
நடந்தது எல்லாம் நல்லதுக்கே: மாதவன் 'ஓப்பன் டாக்'!

சென்னை: 'விக்ரம் வேதா' படத்தினைப் பொறுத்த அளவில் நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்று கருதுகிறேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், இரட்டைஇயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் 'விக்ரம் வேதா'.

புகழ்பெற்ற விக்ரமாதித்தன் - வேதாளம் கதையினை அடிப்படையாக கொண்டு, ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ரவுடி இடையே நடக்கும் மோதல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் 'விக்ரம் வேதா'.

மத்திய அரசு கொண்டு வந்த  28% ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் தமிழக அரசின் 30% கேளிக்கை வரி ஆகியவற்றின் காரணமாக திரைத்துறை கொஞ்சம் தள்ளாட்டத்தில் இருந்த பொழுது கடந்த மாதம் 21-ஆம்  தேதி இந்தப் படம் வெளியானது. நல்ல வரவேற்பினை பெற்ற இந்தப்படமானது ரூ..50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

தற்பொழுது இந்தப்படம் தொடர்பாக செய்தி நிறுவனமொன்றுக்கு நடிகர் மாதவன் அளித்த பேட்டி விபரம் வருமாறு:

முன்னதாகவே இந்தப் படத்தினை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் வரிவிதிப்பு முறைக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் நடத்திய காரணத்தினால்  படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.ஆனால் எல்லாம் நல்லதிற்குத்தான்.. ஜூலை 21-ஆம் தேதி வெளியான இந்தப்படமானது இறைவன் அருளால் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. எனவே எது நடந்தாலும் அது நல்லதிற்காவே நடப்பதாக நினைக்கிறேன்.

இவ்வாறு மாதவன் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com