ரூ. 25 கோடி ஒப்பந்தம்: 190 நாடுகளில் பாகுபலி!

வீடியோ பட சேவையை அனைத்து டிஜிடல் சாதனங்கள் வழியாக வழங்கும் சாதனம் - நெட்ஃபிளிக்ஸ்...
ரூ. 25 கோடி ஒப்பந்தம்: 190 நாடுகளில் பாகுபலி!

வீடியோ பட சேவையை அனைத்து டிஜிடல் சாதனங்கள் வழியாக வழங்கும் சாதனம் - நெட்ஃபிளிக்ஸ். நம் வீட்டில் உள்ள டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி, பிளேஸ்டேஷன்  என அனைத்திலும் நெட்ஃபிளிக்ஸ் வழியாக படம் பார்க்கமுடியும். வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படம் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தரும் நெட்ஃபிளிக்ஸ், பாகுபலி 1 மற்றும் 2 படங்களின் உரிமையைத் தற்போது பெற்றுள்ளது. ரூ. 25.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகுபலி 2 தயாரிப்பாளர் ஷோபு கூறியதாவது: பாகுபலி படத்தை எல்லாப் பகுதிகளிலும் உள்ள திரையரங்குகளுக்குக் கொண்டுசெல்லமுடியாது. ஆனால் நெட்ஃபிளிக்ஸ் மூலமாக அப்படத்தை இனி 192 நாடுகளில் காணமுடியும் என்று கூறியுள்ளார். 

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியது. இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2 படம் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் ரூ. 400 கோடி கூட வசூலித்தது கிடையாது. இந்நிலையில் ஹிந்தி பாகுபலி 2-வின் வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டி மகத்தான சாதனை புரிந்துள்ளது.

இந்தியா முழுக்க தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் 1050 திரையரங்குகளில் தனது 50-வது நாளைக் கடந்து சாதனை செய்தது. இந்நிலையில் இந்தப் படம் சமீபத்தில் தனது 100-வது நாளைக் கொண்டாடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com